திரிதெந்தின் திவ்விய பலி பூசை - TRADITIONAL LATIN MASS (PART 2)

               திவ்விய பலி பூசையின் சாதாரண பாகம்

இரண்டாம் பிரிவு

உபதேசபாகம்

சபைசெபம் முதல் விசுவாசப் பிரமாணம் வரையில்

குரு பீடத்தைமுத்திசெய்து,விசுவாசிகளைமினவிஅவர்களைத் தம்முடைய ஐக்கியத்திலிருக்கும்படிஅழைத்தபின் இப்பாகத்தைதுவக்குகிறார்.

குரு: ஆண்டவர்உங்களுடனே இருப்பாராக
மக்: உமதுஆவியோடும் இருப்பாராக.
குரு: செபிப்போமாக

He kisses the Altar and turning to the people says:

P. Dóminus vobíscum.
S.Et cum spíritu tuo.
1.   சபைசெபம் Collecta

குரு பூசைப் புத்தகத்தண்டைபோய்,கரங்களைவிரித்துக் கொண்டு,குறிக்கப்பட்ட“சபை செபத்தை”செபிக்கிறார்.  இதுநாளுக்குநாள் வேறுபடும்.  இதோடு2, 3 “ஞாபகச் செபங்கள்”அல்லதுவேண்டுதல் செபங்களையும் சேர்த்துசொல்லுவார்;.  பாடற் பூசையில் இதைப் பாடுவார்.

The priest turns back to the altar and says:
Orémus.

செபத்தின் முடிவில் கரங்களைக் குவித்துக்கொண்டு

குரு: என்றென்றைக்கும் சதாகாலமும்
மக்: ஆமென்

Amen.

2. நிருபவாக்கியம் - அப்போஸ்தலர்களின் போதனை

குரு சற்று உயர்த்திய குரலில் நிருபத்தைஅல்லதுவாசகத்தைவாசிக்கிறார். முடிவில்

மக்: சர்வேசுரனுக்குதோத்திரம்.

S. Deo grátias.

3. படிக்கீதம் - சங்கீதப் பாட்டுகள்
(Graduale, Alleluja, Tractus, Sequentia)

நிருப வாக்கியத்திற்கு பின் குரு படிகீதத்தையும், (Graduale) அல்லேலுயா கீதத்தோடு(Alleluja) சேர்ந்த வசனங்களையும் வாசிக்கிறார்.
பாஸ்கு காலத்தில் அல்லேலுய்யா கீதமட்டும்;: தபசு காலத்தில் படிகீதமும், நெடுங்கீதமும்: (Tractus) விசேஷ நாட்களில் தொடர்கீதமும் (Sequentia) வாசிக்கப்படும். பாடற் பூசையில் இதைப் பாடுவார்கள்.
.
4. ஆசீர் கேட்டல் Muda Cor meum

சங்கீதப் பாடல்களுக்குப் பின் குரு பீடத்தின் நடுவிற் சென்று தாழத் தலைவணங்கி இரண்டு செபங்களை சொல்லுகிறார்.  பரிசாரகன் பூசை புத்தகத்தை பீடத்தின் வலப் புறத்திற்கு மாற்றுகிறான். 

After the gradual the missal is moved to the left side of the altar while the priest, bowing at the middle of the altar, says:

1.         இசையாஸ் தீர்க்கதரிசியின் உதடுகளை அக்கினித் தழலைக் கொண்டு தூய்மைப்படுத்திய சர்வ வல்லபரான சர்வேசுரா, தேவரீர் என்னுடைய இருதயத்தையும் உதடுகளையும் சுத்திகரித்து உமது பரிசுத்த சுவிசேஷத்தை தகுந்த வண்ணம் போதிக்க நான் அருகணாகும்பழ என்னை உமது தயையுள்ள இரக்கத்தினால் பரிசுத்தப்படுத்தக் கிருபை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்வின் பேரால் ஆமென்.

2.         ஆண்டவரே என்னை ஆசீர் வதித்தருள்வீராக.  ஆண்டவருடைய சுவிசேஷத்தை நான் தக்க விதமாயும் தகுந்த மேரையோடும் வெளிப்படுத்த அவர் என் இருதயத்திலும் உதடுகளிலும் இருந்தருள்வாராக. ஆமென்.

மரித்தோர் பூசையில் இந்த இரண்டாவது செபம் சொல்லுவதில்லை.
எழுந்து நிற்கவும்




The second prayer is omitted in Requiem Masses

5. சுவிசேஷ வாக்கியம்

குரு விசுவாசிகளின் கவனத்தை கவர்வதற்கு சொல்லுவதாவது

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
மக்: உமது ஆவியோடும் இருப்பாராக

குரு புத்தகத்தின் மேலும், தமது நெற்றியிலும், வாயிலும், நெஞ்சிலும் சிலுவை அடையாளத்தை வரையும்பொழுது

குரு: அர்ச். மத்தேயு (மாற்கு, லூக்கா, அருளப்பர்) எழுதின பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (அல்லது ஆரம்பம்)
மக்: ஆண்டவரே உமக்கு மகிமையுண்டாவதாக.

சுவிசேஷம் இன்றைய பூசையிலிருந்து

சுவிசேஷ வாசகத்தின் முடிவில்

மக்: கிறீஸ்துவே உமக்குப் புகழ் உண்டாவதாக




        .
The Gospel is read. At the end of the Gospel the server says:
Laus tibi, Christe.

குரு சுவிசேஷ வாக்கியத்தின் ஆரம்ப வார்த்தையை முத்தி செய்து

குரு: இப்போது வாசித்த சுவிசேஷ மொழிகளால் நம்முடைய பாவங்கள் ஒழியக்கடவன.

The priest kisses the book and says:
Per evangélica dicta, deleántur nostra delícta.

6. விசுவாச பிரமாணம்

குரு பீடத்தின் நடுவே சென்று கரங்களை மேலே உயர்த்தி மீளவும் குவித்து விசுவாசப் பிரமாணத்தை சொல்லுகிறார்
 இது வருடத்தில் வரும் எல்லா ஞாயிறுகளிலும், பெரிய திருநாட்களிலும், அப்போஸ்தலர்கள், வேதபாரகருடைய திருநாட்களிலும் சொல்லப்படும். பாடற் பூசையில் இதைப் பாடுவார்கள்.

பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்
1. பரலோகத்தையும் பூலோகத்தையும் காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த, சர்வ வல்லபரான (சிரங்குணிந்து) பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
சுதனாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
2. சர்வேசுரனுடைய ஏக பேறான சுதனும் (சிரங் குணிந்து) ஆண்டவருமான சேசு கிறீஸ்துவை விசுவசிக்கிறேன்.

3. இவர் சகல யுகங்களுக்கு முன் பிதாவினிடமிருந்து பிறந்தார்.

4. இவர் சர்வேசுரனிடமிருந்து பிறந்த சர்வேசுரன்.  வெளிச்சத்தினின்றும் வந்த வெளிச்சம்: மெய்யான சர்வேசுரனிடமிருந்து வந்த மெய்யான சர்வேசுரன். 

5. இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவரல்லர். பிதாவோடு ஒரே வஸ்துவானவர்.  இவர் வழியாகத்தான் யாவும் உண்டாக்கப்பட்டன.

6. இவர் மனிதராகிய நமக்காகவும், நம்முடைய இரட்சணியத்திற்காகவும் பரலோகத்திலிருந்து இறங்கினார்.

7. (முழந்தாட்படியிட்டு) இஸ்பிரித்து சாந்துவினாலே கன்னி மரியம்மாளிடத்தில் மாமிசமாகி மனிதன் ஆனார்.

8. (எழுந்து நின்று) இவர் இன்னும் நமக்காகப் போஞ்சியுஸ் பிலாத்தின் கீழ் சிலுவையிலே அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

9. வேதாகமங்களின் படியே, மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தருளினார்.

10. பரலோகத்திற்கு எழுந்தருளிப் பிதாவின் வலப்பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

11. சீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்க மகிமையோடே மீண்டும் வரவிருக்கிறார். அவருடைய இராச்சியத்துக்கு முடிவு இராது.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்

12. பிதாவிடத்திலும் சுதனிடத்திலும் நின்று புறப்படுகிற ஆண்டவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிற இஸ்பிரித்து சாந்துவையும் விசுவசிக்கிறேன்.

13. இவர் பிதாவோடும், சுதனோடும் ஒன்றாக (சிரங் குனிந்து) ஆராதிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறவரும், தீர்க்கதரிசிகள் வழியாய் பேசியுள்ளவருமாமே.

பரிசுத்த திருச்சபையை விசுவசிக்கிறேன்

14. மேலும் ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.

15. பாவமன்னிப்புக்காகவுள்ள ஒரே ஞானஸ்தானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்

16. மரித்தோர் உத்தானத்தையும் எதிர்பார்க்கிறேன்.

சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு

17. வரப்போகிற மறு உலகத்தின் சீவியத்தையும் எதிர்பார்க்கிறேன்.


18. ஆமென்.

                                                            The Creed


Kneel
7. Et incarnátus est de Spíritu Sancto ex María Vírgine: Et homo factus est.

Stand

8. Crucifíxus étiam pro nobis: sub Póntio Piláto passus, et sepúltus est. 
9. Et resurréxit tértia die, secúndum Scriptúras.
10. Et ascéndit in cælum: sedet ad déxteram Patris. 
11. Et íterum ventúrus est cum glória judicáre vivos et mórtuos: cujus regni non erit finis.
12.  Et in Spíritum Sanctum, Dóminum et vivificántem: qui ex Patre, Filióque procédit. 
13. Qui cum Patre, et Fílio simul adorátur, et conglorifícatur: qui locútus est per Prophétas. 
14. Et unam, sanctam, cathólicam et apostólicam Ecclésiam. 
15. Confíteor unum baptísma in remissiónem peccatorum. 
16. Et expecto resurrectionem mortuorum, 
17. et vitam + ventúri sæculi. 
18. Amen.

Comments