திரிதெந்தின் திவ்விய பலி பூசை - TRADITIONAL LATIN MASS ஒப்புக் கொடுத்தலிலிருந்து முகவுரை வரை
இரண்டாம் பாகம் பலிப் பூசைப்பாகம் - விசுவாசிகளின் பாகம் முதல் பிரிவு பலிக்கு உரிய பாகம் ஒப்புக் கொடுத்தலிலிருந்து முகவுரை வரை காணிக்கைகளை ஒப்புக் கொடுத்தல் குரு பீடத்தை முத்திசெய்து விசுவாசிகளை மினவி அவர்களைத் தம்முடன் ஒன்றித்திருக்குமாறு அழைத்த பின் , இப்பலி பாகத்தை துவக்குகிறார் குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக P. Dóminus vobíscum. மக்: உமது ஆவியோடும் இருப்பாராக S. Et cum spíritu tuo. குரு பீடத்தின் பக்கமாய்த் திரும்பிக் கொண்டு குரு: செபிப்போமாக P. Orémus. உட்காரவும் 1. ஒப்புக்கொடுத்தல் வாக்கியம் குரு கரங்களை கூப்பி இதை வாசிக்கிறார். இது நாளுக்கு நாள் வேறுபடும். ஒப்புக்கொடுத்தல் இன்றைய பூசையிலிருந்து காணிக்கைச் செபங்கள் அப்பத்தை காணிக்கையாக்குதல் குரு பாத்திரம் மூடி இருந்த பட்டை எடுத்துவிட்டு அப்பத்தை தட்டிலேந்தி பலியின் கருத்துகளைச் சொல்லிக்கொண்டு ஒப்புக் கொடுக்கும் போது உன்னையும் உன் மன்றாட்டுகளையும் அதோடு சேர்த்துக் கொள் பரிசுத்த பதாவே சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா , தேவரீர...