திரிதெந்தின் திவ்விய பலி பூசை - TRADITIONAL LATIN MASS ஒப்புக் கொடுத்தலிலிருந்து முகவுரை வரை
இரண்டாம் பாகம்
பலிப்
பூசைப்பாகம் - விசுவாசிகளின் பாகம்
முதல்
பிரிவு
பலிக்கு
உரிய பாகம்
ஒப்புக்
கொடுத்தலிலிருந்து முகவுரை வரை
காணிக்கைகளை
ஒப்புக் கொடுத்தல்
குரு பீடத்தை முத்திசெய்து
விசுவாசிகளை மினவி அவர்களைத் தம்முடன் ஒன்றித்திருக்குமாறு அழைத்த பின், இப்பலி
பாகத்தை துவக்குகிறார்
குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக
P. Dóminus vobíscum.
மக்: உமது ஆவியோடும் இருப்பாராக
S. Et cum spíritu tuo.
குரு பீடத்தின் பக்கமாய்த்
திரும்பிக் கொண்டு
குரு: செபிப்போமாக
P. Orémus.
உட்காரவும்
1. ஒப்புக்கொடுத்தல் வாக்கியம்
குரு கரங்களை கூப்பி இதை
வாசிக்கிறார். இது நாளுக்கு நாள்
வேறுபடும்.
ஒப்புக்கொடுத்தல் இன்றைய
பூசையிலிருந்து
காணிக்கைச்
செபங்கள்
அப்பத்தை
காணிக்கையாக்குதல்
குரு
பாத்திரம் மூடி இருந்த பட்டை எடுத்துவிட்டு அப்பத்தை தட்டிலேந்தி பலியின்
கருத்துகளைச் சொல்லிக்கொண்டு ஒப்புக் கொடுக்கும் போது உன்னையும் உன்
மன்றாட்டுகளையும் அதோடு சேர்த்துக் கொள்
பரிசுத்த பதாவே சர்வ வல்லபரான
நித்திய சர்வேசுரா, தேவரீருடைய
அபாத்திர ஊழியானாகிய அடியேன், கணக்கற்ற என்
பாவங்களுக்காகவும், துரோகங்களுக்காகவும், அசட்டைத்தனத்திற்காகவும், இங்கு சூழ்ந்து நிற்கின்ற
சகலருக்காகவும், இன்னும் சீவியரும், மரித்தோருமான
எல்லாக் கிறீஸ்தவ விசுவாசிகளுக்காகவும், எனக்கும்
அவர்களுக்கும் நித்திய சீவியத்தின் இரட்சணியத்திற்காக உதவும்படி, சீவியரும் சத்தியமுள்ளவருமான என் சர்வேசுரனாகிய உமக்கு
ஒப்புக்கொடுக்கிறஇந்த மாசற்ற பலிப்பொருளைக் கையேற்றுக் கொள்ளும். – ஆமென்.
குரு
திருமேனித்துகில் மேல் தட்டோடு அப்பத்தைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்து
அத்துணியின் மேல் அப்பத்தையிட்டுத் தட்டைத் துணியின் அடியில் வைத்து
நிருபப்பக்கத்திற்குப் போகிறார்.
பாத்திரத்தில்
இரசத்தை ஊற்றிய பின் தண்ணீரை ஆசீர்வதிக்கிறார்
குரு
தண்ணீரை சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர்வதித்து பாத்திரத்தில் ஊற்றும்போது:
மனித சுபாவத்தை ஆச்சரியத்துகுரிய விதமாய் உண்டாக்கி, இன்னும் அதிக ஆச்சரியத்துக்குரிய விதமாய் அதை புதுப்பித்திருக்கிற
சர்வேசுரா, எங்கள் மனித சுபாவத்திலே பங்குபெற திருவுளமான
உமது திருக்குமாரனும், எங்கள் ஆண்டவருமாகிய சேசுக்கிறீஸ்து
நாதருடைய தேவசுபாவத்திலே நாங்களும், இந்த இரசமும் தண்ணீருங்
கலக்கும் பரம இரகசியத்தினால் பங்கு பெற்றவர்களாக எங்களுக்கு அனுக்கிரகஞ் செய்தருளும்.
அவர் தேவரீரோடு இஸ்பிரித்து சாந்துவின் ஐக்கியத்தில் சர்வேசுரனுமாய்
என்றென்றைக்கும் சதாகாலமும் சீவியருமாய் இராச்சிய பரிபாலனஞ்
செய்கிறவருமாயிருக்கிறவர்.
மரித்தோர்
பூசையில் தண்ணிரை ஆசீர்வதிப்பதில்லை
இரசத்தை
காணிக்கையாக்குதல்
குரு பீடத்தின் நடுவே வந்துபாத்திரத்தைக்
கையிலேந்தி திருச்சிலுவை நோக்கிக் கொண்டே அதனை ஒப்புக் கொடுக்கிறார்.
ஆண்டவரே இரட்சணியத்தின் பாத்திரம்
எங்கள் இரட்சணியத்திற்காகவும் சர்வலோகத்தின் இரட்சணியத்திற்காகவும் உமது தெய்வீக
மகத்துவ பிரதாபத்தின் சன்னதியில் சுகந்த வாசனையுடன் எழும்பும்படி தேவரீருடைய தயவை
இரந்து மன்றாடி உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். ஆமென்.
காணிக்கைகளை
ஆசீர்வதித்தல்
குரு
வணங்கி கரம் குவித்து செபிக்கிறார்
ஆண்டவரே தாழ்ச்சியுள்ள மனதோடும் பச்சாதாப ஆத்துமத்தோடுமுள்ள நாங்கள்
தேவரீரால் ஏற்றுக் கொள்ளப்படவும் இப்படியே தேவனாகிய ஆண்டவரே, உமது திருச்சமூகத்தில் எங்களுடைய பலியானது இன்று உகந்தாயிருக்கவும்
அருள்வீராக.
இஸ்பிரித்து
சாந்துவை அழைத்தல்
குரு திருச்சிலுவை
நோக்கிக் கரங்களை உயர்த்தி குவித்துக் காணிக்கைகளை ஆசீர்வதிக்க
இஸ்பிரித்துசாந்துவை அழைக்கிறார்
அர்ச்சிக்கிறவரே, சர்வ வல்லபரும் நித்தியருமான
சர்வேசுரா, தேவரீர் எழுந்தருளிவந்து உம்முடைய பரிசுத்த
நாமத்தின் மகிமைக்காக ஆயத்தப்படுத்திய இப்பலியை (சிலுவை அடையாளம் வரைந்து)
ஆசீர்வதித்தருளும்
Comments
Post a Comment